Thursday, August 19, 2010

இன்றைய உலக பொருளாதாரம் - ஒரே நிமிடத்தில் விளக்கம்

இன்றைய உலக பொருளாதாரத்தின் போக்கை புரிந்து கொள்ள "The International" என்ற படத்தில் வந்த இந்த ஒரு கிளிப்பிங் போதுமானது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் The International.

இது அமெரிக்காவின் Federal Reserve கடனுக்கும் பொருந்துமா?

ஒரு சிறிய விளக்கம்

"The International" என்ற படம் தற்போதைய பன்னாட்டு நிதி நிறுவனக்கள் எப்படி செயல் படுகிறது என்பது பற்றியது. அவர்களிடம் உள்ள மித மிஞ்சிய அதிகாரம் மற்றும் பணம் கொண்டு உலகளவில் எவ்வாறு சட்டத்துக்கு புறம்பான செயல்களை(ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல்) கொண்டு உலகெங்கிலும் அமைதியின்மை, போர் மற்றும் கலவரம் ஏற்படுத்தி அதில் காசு பார்க்கும் விதம் பற்றியதுமானது கதை.

ஆனால் நான் இந்த பதிவில் போட்டதிற்கு முக்கிய காரணம் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் கடனுக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும் இடைபட்ட தொடர்பை பற்றி இது கூறுவதால் தான்.

எந்த ஒரு நாட்டையும் அடிபணிய வைத்து அவர்களிடமிருந்து செல்வத்தை அட்டையாக உரிய முக்கிய வழி அவர்கள் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்வதோ அல்லது பிற வழிகளோ இல்லை. அவர்களை மிக நெடிய கடன் வலையில் வீழ வைத்தால் அந்த நாடுகளின் முடிவெடுக்கும் அதிகாரம் கடன் கொடுத்தவர்கள் கைக்கு சென்றுவிடும்.

உதாரணமாக 1970க்கு பிறகு அமெரிக்க அரசு செயற்கையாக ஏற்படுத்திய எண்ணை விலை உயர்வால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் Sovereignty ஐ இழந்து விட்டனர்(இந்தியா உட்பட). அதன் தொடர்ச்சியாக ஈராக் போர்,ஆப்கான் போர் என நடத்தி தீவாரவாதத்தை பெருக்கி உலகெங்கிலும் ஒரு பாதுகாபற்ற நிலை உருவாக்கி வரவுக்கு மீறிய ராணுவ செலவீனங்களை ஏழை நாடுகள் மீது திணித்து அவர்களை மாபெரும் கடனாளி ஆக்கி, உலக நிதி நிறுவனங்களின் கட்டுபாட்டிற்கு அவர்களை தள்ளி செல்கின்றனர்.

இதன் அடிபடையில் தான் இந்த படத்தில் நாடுகளை கட்டு படுத்த எளிய வழி அவர்களை கடனாளிகளாக ஆக்குவது தான் என்கிறது.

--

4 comments:

saravana said...

இதன் தமிழாக்கம் ப்ளீஸ் !

சதுக்க பூதம் said...

வாங்க சரவனா

இந்த கிளிப்பில் வரும் செய்தியின் விளக்கத்தை சேர்த்து விட்டேன்

வடுவூர் குமார் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! மற்ற நாடுகள் இதற்கு மாற்றாக ஏன் யோசிக்கவில்லை?? ஒரு நாடாக இருந்தால் பரவாயில்லை,பல நாடுகள் எப்படி ஒரே கல்லில் விழுமாதிரி செய்தார்கள்? அந்நாட்டில் பொருளாதரம் படித்த ஆளே இல்லையா?

சதுக்க பூதம் said...

வாங்க வடுவூர் குமார். 1970 அரபு பிரச்ச்னை- எண்ணெய் விலை உயர்விலிருந்து ஆரம்பித்து(ஆரம்பித்து வைக்க பட்டு) நாடுகளின் தணி தன்மையை அழித்தது பெரிய கதை. அதை பற்றி பின் விரிவாக பதிவிடுகிறேன்.