Sunday, July 04, 2010

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1





முதல் பகுதியில் ஆசியாவுக்கான வர்த்தக வழிகளை பற்றியும் கிழக்கிந்திய கம்பெனி(கி.இ.க) ஆரம்பிக்க பட்ட வரலாறு பற்றியும் பார்த்தோம். கி.இ.க இந்தியாவில் இருந்த கால கட்டத்தை இரு பிரிவாக பிரிக்கலாம்.முதல் கால கட்டம் அது இந்தியாவிடம் வர்த்தகம் மட்டும் செய்த காலம். இரண்டாம் கால கட்டம் அது இந்தியாவை சிறிது சிறிதாக அரசியல் ரீதியாக தன் கட்டுபாட்டில் எடுத்து வைத்து கொண்ட காலம்.

இவற்றில் முதல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு நிறைய நன்மை கிடைத்தது எனலாம்.கி.இ.க ஆரம்பிக்க பட்ட போது அது 30,000 ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு ஈடான வாசனை பொருட்கள், துணி மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கபட்டது.அனுமதிக்க பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி மதிப்பு சிறிது சிறிதாக வருடந்தோரும் அதிகரிக்கபட்டது. உதாரணமாக 1629ம் ஆண்டு அது 160,000 பவுண்டாக(125,000 -வெள்ளி, 40,000 - தங்கம்) அதிகரிக்க பட்டு இருந்தது.அதாவது செல்வமாக கருதபடும் தங்கம், வெள்ளி இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பட்டு இந்தியாவிலிருந்து வாசனை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்திற்கும் அதன் பிறகு அங்கிருந்து பிற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி மற்றும் செல்வ வளம் இந்தியாவில் பெருகியது. ஆனால் அப்போது இருந்த முகலாய அரசாங்கமோ அந்த செல்வங்களை மாட மாளிகைகள் கட்டவும் பிற ஆடம்பர செலவுகளுக்கும் செலவிட்டது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் கிடைத்த செல்வ பெருக்கை முதலாளித்துவ இங்கிலாந்தோ தொழிற்புரட்சி ஏற்படுத்த முதலீடாக மாற்றியது.

கி.இ.க ஆசியாவிலிருந்து பொருட்களை வாங்க பெருமளவு தங்கம் வெள்ளி செலவிட்டதால் இங்கிலாந்தின் செல்வம் வெளியேற தொடங்கியது.இதை தவிர்க்க இங்கிலாந்தில் உற்பத்தி ஆன துணிவகைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட பணிக்க பட்டது. இங்கிலாந்து துணிவகைகள் கடுங்குளிரில் அணிபவையாக இருப்பதால் ஆசியாவில் உள்ள வெப்ப பிரதேசங்களில் உடுத்தி கொள்ள உகந்ததாக இல்லை. எனவே இங்கிலாந்து துணிகள் ஆசிய மக்களுக்கு மிதியடிகளாகவும் ஜன்னல் விரிப்புகளாக மட்டும் பயன் பட்டன. அது மட்டுமின்றி இந்திய மற்றும் சீன துணிகளின் தரத்திற்கும் அது இல்லை.நம்மில் பெரும்பாலானோர் வாசனை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தான் எப்போதும் முதலிடம் பெற்றிருந்தது என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மையில்லை. கிழக்கு இந்திய தீவுகள் என்று அழைக்கபடும் ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வாசனை பொருட்கள் உற்பத்தியிலும், வாணிபத்திலும் முதலிடத்தில் இருந்தது(அதனால் தான் என்னவோ ராஜேந்திர சோழன் இந்நாடுகள் மீது போர் தொடுத்து தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான் போலும்!). எனவே கி.இ.க- பொதுவாக வாசனை பொருட்களை ஜாவா சுமத்திரா போன்ற நாடுகளில் பெருமளவு கொள்முதல் செய்தது. அந்நாட்டினர் இங்கிலாந்து துணிகளை வாங்க விரும்பவில்லை. எனவே வெள்ளியை கொடுத்தே வணிபம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது இந்திய துணிகளுக்கு அந்நாட்டு மக்களிடம் வரவேற்பு இருப்பதை கண்ட கி.இ.க, உடனே இந்தியாவில் துணி தொழிற்சாலை நிறுவி, அந்த துணிகளை கீழை நாடுகளில் வாசனை பொருட்களுக்கு மாற்றாக விற்க தொடங்கியது. இதன் மூலம் கி.இ.க கம்பெனிக்கும் வருமானம் கிடைத்தது. இங்கிலாந்தின் வெள்ளியும் சேமிக்க பட்டது, இந்திய துணிகளுக்கு பெருமளவில் புதிய சந்தை கிடைத்ததால் இந்திய தொழில் துறையும் வளர்ந்தது.

இந்திய துணிகளை கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு இருந்து விடாமல், அதை இங்கிலாந்திலும் விற்க ஆரம்பிக்க பட்டது. இங்கிலாந்தில் இந்திய துணிகளுக்கு பெருமளவு கிராக்கி ஏற்பட்டது.இந்திய துணிகளின் இறக்குமதியும் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வ செழிப்பும் பல மடங்கு பெருகியது. அது இங்கிலாந்து துணி தொழில் துறையையே அழித்து விடும் அளவு வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய துணிகளை அணிவதையே இங்கிலாந்து அரசு தடை செய்யும் அளவிற்கு சென்றது.1770 ஆண்டு கம்பெனியின் வணிப மதிப்பில் 60% இடத்தை துணி வர்த்தகமே பிடித்து கொண்டது. இந்திய துணி தொழிற்துறை பெருமளவு வளர இது உதவியது.

அந்த காலத்தில் வாசனை பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்த ஜாவா,சுமத்திரா போன்ற கிழை நாடுகள் பிற ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதியில் வாசனை பொருட்கள் உற்பத்தியை பெருமளவு பெருக்க அதிக முயற்சி எடுத்து வாசனை பொருட்கள் வாணிபத்தையும் இந்தியாவில் பெருக்கியது.

1664ம் ஆண்டு முதன் முதாலாக கி.இ.க சீன டீயை இங்கிலாந்தில் அறிமுக படுத்தியது. அதன் பிறகு இங்கிலாந்தில் டீயின் தேவை அதிகமாக இருந்ததால் , டீயை சீனாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்தது. பிறகு சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவிலும் பெருமளவு டீயை பயிரிட தொடங்கி தோட்டக்கலை வளர்ச்சிக்கும் உதவியது.

மேற்கூறிய வியாபார பொருட்களை இங்கிலாந்துக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய பட்ட பொருட்கள் அங்கிருந்து பிற அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக இருந்த அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இந்திய பொருட்களின் சந்தை உலகலவில் பெரிதாக விஸ்தரிக்கபட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரவால் இந்திய வியாபாரிகள் முக்கியமாக குஜராத்திய வியாபாரிகள் மற்றும் பிற ஆசிய நாடுகளின் வியாபாரிகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வியாரிகளின் வியாபாரம் பெருமளவு பாதிக்க பட்டது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி என்றவுடன் அது இந்தியாவை அடிமை படுத்தி, வர்த்தக ரீதியாக சுரண்டியது பற்றி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் வர்த்தக ரீதியாக மேற் கூறிய நன்மைகளும் இந்தியாவிற்கு கிடைத்தது.

அடுத்த பதிவில் கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை தொடர்பையும் அது உலக அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்ப்போம்


--

6 comments:

vasu said...

உங்கள் பதிவுகளால் நீங்கள் உண்மையில் என்னை வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்... மிக்க நன்றி...

மதன் said...

Why this much gap between these two parts..

Expecting 3rd part..

Its very interesting..write more.

Thanks for the post.

Maximum India said...

இந்திய சரித்திரத்தின் இந்த காலகட்டத்தைப் பற்றிய தகவல்களை நான் அதிகம் அறிந்தவனில்லை. உங்கள் பதிவின் மூலம் அறியப் பெற்ற புதிய தகவல்கள் சுவாரசியமாக இருந்தன.

மிக்க நன்றி!

சதுக்க பூதம் said...

வாங்க வாசு. உங்கள் கருத்துக்கு நன்றி

சதுக்க பூதம் said...

வாங்க மதன். வேலை பளு அதிகம் உள்ளதால் குறைந்த இடைவெளியில் பதிவிட முடியவில்லை. இனி நிச்சயம் என்னால் இயன்ற வரை குறைந்த இடைவெளியில் பதிவிட முயல்கிறேன்

சதுக்க பூதம் said...

வாங்க மேக்சிமம் இந்தியா. நன்றி. கிழக்கிந்திய கம்பெனி என்பது உலகின் முதல் பெரிய பன்னாட்டு கம்பெனி எனலாம். அதன் செயல்பாடுகள் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகள் பலவற்றுடன் ஒத்து போய் உள்ளது. எனவே கி.இ.க யின் வர்த்தக தொடர்போடு பன்னாட்டு கம்பெனியின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு எழுதலாம் என தோன்றியது.