Monday, June 15, 2009

அபாயத்தில் இந்தியா-டோகா பேச்சுவார்த்தை?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவின் அடிப்படை உரிமைகளையும், ஏழை இந்தியர்களையும்,விவசாயிகளையும் காப்பாற்ற மிக கடினமான பேச்சுவார்த்தை உலக வர்த்தக அமைப்போடு நடைபெற்று வருகிறது. முரசொலி மாறன் வர்த்தக அமைச்சராக இருந்த போது, தன்னுடைய சொல்லாற்றலாலும் அறிவு கூர்மையாலும் இந்தியாவுக்காக மிக கடுமையாக வாதாடி இந்தியாவின் பக்கம் ஏற்பட இருந்த மிக பெரிய இழப்பை தவிர்த்திருந்தார்.முந்தய அமைச்சரவையில் இருந்த கமல் நாத் கூட அந்த பொருப்பை திறமையாக எடுத்து நடத்தினார். ஆனால் தற்போது புதிய அமைச்சராக இருக்கும் ஆனந்த் சர்மா உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதை பற்றிய விவரங்களை வெளியிட வில்லை.

இந்த முன்னேற்றம் இந்தியவின் முக்கிய நலன்களை விட்டு கொடுக்காமல் வந்திருந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளதாக நம்பமுடியவில்லை. இந்திய நலன்களை விட்டு கொடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அது மிக பயங்கர அபாயகரமான விளைவுகளை பிற்கால சந்ததியினருக்கு ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் எதிர்காலத்தை பெரிய அளவில் பாதிக்க கூடிய உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தும் வர்த்தக அமைச்சர் பதவியை , இத்துறையில் அந்த அளவு அனுபவம் இல்லாத ஆனந்த் சர்மாவிடம் கொடுத்த போதே, புதிய அரசின் உண்மையான நோக்கம் பற்றி சந்தேகத்தை எழுப்பியது.

மற்ற பொதுதுறைகளை குறைந்த விலைக்கு விற்று ஒரு சில தனி நபர்கள் சம்பாதிக்க திட்டமிடுவதை போல், உலக வர்த்தக அமைப்பிலும் ஒரு சில தனி நபர்களின் நன்மைக்காக இந்தியாவின் எதிர்காலத்தை அடகு வைத்து விடாமல் இருந்தால் நல்லது.

அதே நேரம் இந்தியாவின் முக்கிய தேவைகளை விட்டு கொடுக்காமல் ஒரு சில சிறு இழப்போடு இதனை நிறைவேற்றினால், நிச்சயம் வரவேற்க தக்கதே.

ஒரு துப்பாக்கி சுட்டால் ஒருவர் மட்டும் இறப்பார்
ஒரு தீவிரவாத தாக்குதலில் சில நூறு பேர் மட்டும் இறப்பார்கள்
ஒரு போரில்(அணு ஆயுதம் ஈடுபடுத்தாத) சில ஆயிரம் பேர் இறப்பார்கள்.

ஆனால் தற்போதயை நிலையில் உள்ள உலக வர்த்தக ஒப்பந்தத்தினால் பல லட்சம் விவசாயிகளும்,கூலி தொழிலாளர்களும்,சிறு தொழிலாளர்களும் இறக்க வாய்ப்புள்ளது!


இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தவறு ஏற்பட்டால் அதை எதிர்த்து கேட்கும் நிலையில் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.கவும் இல்லை.இடது சாரிகளும் இல்லை.

சாதாராண மக்களுக்கும் அது பற்றி கவலை இல்லை.


--

4 comments:

குப்பன்.யாஹூ said...

murasoli maaran has nothing did for India or India's welfare.

Just because he is kalaignar's nephe he got minister post, thats all.

சதுக்க பூதம் said...

//murasoli maaran has nothing did for India or India's welfare.
//

உலக வர்த்தக அமைப்பின் விதிகள் பற்றியும் டோகா பேச்சுவார்த்தை பற்றியும் விரிவாக படித்து பாருங்கள். வளரும் நாடுகளுக்கு எதிராக பல முடிவுகள் எடுக்க இருந்த நேரத்தில் மாறன் தனித்து போராடி மிக பெரிய இழப்பிலிருந்து இந்தியாவை காப்பாற்றினார். உலக வர்த்தக அமைப்பு, டோகா பேச்சுவார்த்தை, மாறனின் வாதம் பற்றி பின்னூட்டத்தில் எழுதும் அளவுக்கு சிரியது அல்ல. அதற்கு பல பதிவுகள் ஆகும்.

தி.மு.க வின் எதிர்ப்பு பத்திரிக்கையில் மாறன் பற்றி எழுதியிருப்பதை பாருங்கள்.

http://www.financialexpress.com/news/murasoli-maran-passes-away/49090/2

பொதுவாகவே தமிழர்களுக்கு தமிழர்கள் செய்யும் சாதனைகளை ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லை.

அறம் செய விரும்பு said...

வாழ்த்துக்கள் திருவாளர் சதுக்குபூதம் !!! உங்களின் வலைப்பூவை இந்தவார (08/07/2009)விகடன் வரவேற்பறையில் வாழ்த்தியுள்ளார்கள் !!! உமக்கு எமது வாழ்த்துக்கள்...

தொடர்க தமிழ்பணி

அன்புடன்
அறிவுடைநம்பி

சதுக்க பூதம் said...

தகவலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அறிவுடைநம்பி .