Tuesday, March 24, 2009

டாலருக்கு மாற்று- சீனா முதல் முறையாக போர்கொடி

உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதால் அதற்கு ஏற்படும் நன்மையை பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் விரிவாக விளக்கியிருந்தேன். சமீபத்திய பொருளாதார நெருக்கடியாலும் அதை தொடர்ந்து அமெரிக்கா எடுக்கும் quantitative easing முறையாலும், அமெரிக்காவிற்கு கடன் அளித்துள்ள மற்றும் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள்,முக்கியமாக சீனா போன்ற நாடுகள் அதிருப்தி அடைந்திருந்தனர். சீனாவின் பிரதம மந்திரி சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் சீனா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு பற்றி கவலை தெரிவித்திருந்தார்.

G - 20 நாடுகளின் கூட்டமைப்பு தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து உலகம் தப்பிப்பதற்கான வழிமுறை பற்றி ஆராய ஏப்ரல் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் கூட உள்ளனர். இந்த சூழ்நிலையில் சீனாவின் மத்திய வங்கியின் தலைவர் உலக அளவில் டாலருக்கு மாற்றாக IMF உதவியுடன் புதிய சேமிப்பு நாணயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.சீனாவிடமிருந்து, அதுவும் சீனாவின் மத்திய வங்கி தலைவரிடமிருந்து இச்செய்தி வந்திருப்பது உலகலவில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்க ட்ரசரி செக்ரட்டரி கெயிட்னர் சில நாள்களுக்கு முன் சீனாவின் நாணயத்தின் மதிப்பை குறைக்க வலியுறித்தியதிலிருந்து அமெரிக்கா சீனாவுடனான பனிபோர் வெளிபடையாக தெரிய ஆரம்பித்தது.

தற்போது IMFஇன் சிறப்பு பிரதிநித்துவம்(SDR) பெற்ற பண கூட்டமைப்பை பிற நாடுகளை சேர்த்து வலிமையாக்கி அதன் அடிபடையில் புதிய நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று சீனா அதிகாரி கூறியுள்ளார். இதன் மூலம் கடன் அடிபடையான நாடுகளின்(அமெரிக்கா) நாணயத்தை சேமிப்பு நாணயமாககொண்டுள்ளதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பி, உலக அளவில் வலுவான பொருளாதார கட்டமைப்பு ஏற்படுத்தலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சீனாவின் மத்திய வங்கி தலைவர் கூறியுள்ளது

Zhou Xiaochuan, the governor of the Chinese central bank, implicitly criticised the status of the dollar as the world's sole reserve currency. "The price is becoming increasingly high, not only for the users, but also for the issuers of the reserve currencies," Mr Zhou said.

He added: "The role of the SDR has not been put into full play due to limitations on its allocation and the scope of its uses. However, it serves as the light in the tunnel for the reform of the international monetary system.

"The goal of reforming the international monetary system, therefore, is to create an international reserve currency that is disconnected from individual nations and is able to remain stable in the long run, thus removing the inherent deficiencies caused by using credit-based national currencies."

இந்த முடிவுக்காக சீனா எந்த அளவு அழுத்தம் தெரிவிக்க போகிறது என்றும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அதை எவ்வாறு எதிர் கொள்ள போகிறது என்று இனி வரும் நாட்களில் பார்ப்போம்

--

4 comments:

குருத்து said...

நல்ல செய்தி.

தமிழில் பொருளாதார விசயங்கள் குறித்து வலைத்தளங்கள் மிக மிக குறைவு.

தொடர்ச்சியாய எழுதுங்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது மட்டம் நடந்தால் புதிய திசைகளில் நிதிச் சந்தைகள் திரும்பக் கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.
இப்படி ஒன்று வந்தால் புதிய செலாவணியின் மதிப்பு திரும்ப பேஸ்கட் கரன்ஸி எனச் சொல்லப்படும் சில நாடுகளின் நாணய மதிப்பின் மூலம்தான் அடைய முடியும்;அல்லது இப்போது இருக்கும் யூரோ அல்லது பவுண்ட் ஆகிய வற்றில் ஒன்றைக் கருதலாம் எனினும் அவையும் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் இல்லை.

எனக்கென்னவோ சீனாவும் ஜப்பானும் இதில் கை கோர்க்கும் வாய்ப்புகள் தெரிகின்றன...

சதுக்க பூதம் said...

//தொடர்ச்சியாய எழுதுங்கள்//

நன்றி குருத்து. நிச்சயம் பயனுள்ள பொருளாதார பதிவுகளை தொடர்ந்து எழுதுகிறேன்

சதுக்க பூதம் said...

//இப்படி ஒன்று வந்தால் புதிய செலாவணியின் மதிப்பு திரும்ப பேஸ்கட் கரன்ஸி எனச் சொல்லப்படும் சில நாடுகளின் நாணய மதிப்பின் மூலம்தான் அடைய முடியும்;அல்லது இப்போது இருக்கும் யூரோ அல்லது பவுண்ட் ஆகிய வற்றில் ஒன்றைக் கருதலாம் எனினும் அவையும் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் இல்லை.

எனக்கென்னவோ சீனாவும் ஜப்பானும் இதில் கை கோர்க்கும் வாய்ப்புகள் தெரிகின்றன...
//

வாங்க அறிவன். ரொம்ப நாள் கழித்து இந்த பதிவிற்கு திரும்ப வந்துள்ளீர்கள்.
நீங்கள் கூறுவது உண்மை. புதிய நாணய மதிப்பு டாலர்,பவுண்ட்,யூரோ, சீன மற்றும் ஜப்பான்(இந்தியா?) நாணய மதிப்புகளின் கூட்டு மதிப்பை வைத்து நிர்ணயிக்க படலாம். இதில் டாலரின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், தற்போது போல் மோனோபொலியாக இருக்காது. பெடரல் ரிசெர்வில் பல யூரோப்பிய நாடுகளின் வங்கிகளின் பங்களிப்பு இருப்பதால் டாலரின் முக்கியத்துவத்தை குறைய அவை முயலுமா என் சொல்ல முடியாது. அதே போல் யுரோவின் முக்கியத்துவம் இதில் கூடவும் வாய்ப்புள்ளது.

தற்போது ரஸ்யாவுடனான உறவை சீனா மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. எனவே ரஸ்யாவின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கும்.

அதே நேரத்தில் அரேபிய வளைகூடா நாடுகள் பொது நாணயத்தை 2010ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். எனவே அவர்களும் முக்கிய பங்காற்றலாம்.