Monday, February 23, 2009

சுவிஸ் வங்கியின் ரகசியம்- அமெரிக்காவை பின்பற்றுமா இந்தியா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளிளும் உள்ள பெரிய ஊழல் பெருச்சாளிகளின் பணத்திற்கு பாதுகாப்பான சொர்க்கமாக உள்ளது சுவிஸ் வங்கி. அதற்கு முக்கிய காரணம் அங்கு பணத்தை முதலீடு செய்பவர்களின் பெயரும் கணக்கும் மிகவும் ரகசியமாக வைக்கபடுவது தான்.இவ்வாறு தன் சொந்த நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை சுவிஸ் வங்கியில் கணக்கில் வைப்பதால் அந்த நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றில் சில- வரி இழப்பு,பணத்தை வங்கியில் போட்டால் அதன் மூலம் புதிதாக உருவக்க படும் பணப்புழக்கம் குறைவு, ஊழல் மற்றும் லஞ்சப்பெருக்கம் மற்றும் சமூக விரோத கும்பல்களின் குழுமம் பெருக்கம் போன்றவை.

இந்த பிரச்சனகள் அமெரிக்காவை கூட விட்டு வைக்கவில்லை.2002 - 2006 வரை அமெரிக்கர்கள் சுமார் $20 பில்லியன் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து உள்ளனர். இதன் மூலம் $200 மில்லியன் அமெரிக்க அரசுக்கு வரி இழப்பாகி உள்ளது. சுவிஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களின் கணக்குகளை இரகசியமாக வைப்பது பல ஆண்டுகளாக உள்ள பழக்கம். ஆனால் அமெரிக்கா தற்போது சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவித்து இவ்வாறு சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்யும் அமெரிக்கர்களின் பட்டியலை அமெரிக்க அரசிடம் தெரிவிக்க அனுமதி பெற்று விட்டது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சட்ட விரோதமாக வைத்திருக்கும் பணம் தான் அதிக அளவு உள்ளது என்று ஒரு பேச்சு வெகு காலமாக உள்ளது. அமெரிக்க அரசு செய்ததை போல் ஏன் இந்திய அரசும் சுவிஸ் வங்கியிடம் அழுத்தம் தெரிவிக்க கூடாது? மற்ற அனைத்திற்கும் அமெரிக்காவை பின் பற்றும் மன்மோகன் அரசு இதற்கு மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறது. இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஏன் அனைத்து கட்சியினரும் எழுப்ப முற்படவில்லை? மற்ற விஷயத்திற்கு எல்லாம் பத்திரிக்கை தர்மம் பேசி பெரிய பிரச்சனையை கிளப்பும் இந்திய பத்திரிக்கைகள் இந்த அத்தியாவசிய முக்கிய பிரச்சனையில் மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன்?

சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளது பெரும்பாலும் இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்,மாபியாக்களும் அவர்களின் பிடியில் இருக்கும் பத்திரிக்கை உலகும் தான் என்பது இதன் மூலம் புலனாகிறது. மற்ற பிரச்சனைகளுக்கு பார்லிமெண்ட் மற்றும் இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கும் இடது சாரிகள் இந்த பிரச்சனையில் மட்டும் ஓடி ஒளிவது ஏன்?

அமெரிக்கா தற்போது நடவடிக்கை எடுத்து உள்ளதால், இந்த சந்தர்பத்தை இந்தியா அழகாக பயன் படுத்தி அங்கு பதுக்க பட்டுள்ள இந்திய பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். உண்மையிலேயே இந்தியா முயற்சி செய்யுமா? இது பற்றி யார் கவலை பட போகிறார்கள்.


--

6 comments:

Unknown said...

இதைப் பற்றி இரண்டு பதிவுகளை எழுதி முடித்தேன். வெளியிடும் முன்னர் உங்கள் பதிவை பார்க்கிறேன். என்ன ஒற்றுமை!
இந்தியாதான் முதல் இடத்தில்!!!

சதுக்க பூதம் said...

நன்றி சுல்தான். உங்கள் பதிவை விரைவில் வெளியிட்டு இந்த செய்தியை நிறைய வாசகர்களை சென்றடைய உதவுங்கள்

Anonymous said...

//இந்த சந்தர்பத்தை இந்தியா அழகாக பயன் படுத்தி அங்கு பதுக்க பட்டுள்ள இந்திய பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். //

nadaimuraiyil endrume ithu sathiyam yendru yenaku theriyavilai

சதுக்க பூதம் said...

//nadaimuraiyil endrume ithu sathiyam yendru yenaku theriyavilai
//
GOK(God only Knows)
or GWK?(God wants to Know?)

வடுவூர் குமார் said...

கேட்கும் அரசுக்கே என் ஓட்டு என்று சொல்லிப்பார்க்கலாம் - மக்கள்.

சதுக்க பூதம் said...

//கேட்கும் அரசுக்கே என் ஓட்டு என்று சொல்லிப்பார்க்கலாம் - மக்கள்.

//
அந்த விழிப்புணர்வு மக்களுக்கு விரைவில் வரும் என்று நம்புவோம் வடுவூர் குமார்